Tuesday, December 4, 2007

அழகிய தமிழ் படம்!!???


ஒரு அழகான தமிழ் படம் பார்க்கலாமேன்னு பசங்களோட சேர்ந்து "அழகிய தமிழ் மகன்" போகலாம்னு முடிவு பண்ணி கிளம்பினேன்। (அப்படி என்னங்க சிரிக்கறதுக்கு இருக்கு இதிலே) ஆனா நீங்க சிரிச்சாலும், சிரிக்கலைனாலும் எங்க பொழப்புதாங்க சிரிப்பா சிரிச்சு போச்சு. படத்துக்கு கிளம்பிறதுக்கு முன்னாடியே பல எடத்திலேர்ந்தும் பல எச்சரிக்கை வந்துச்சு. ஆனா நம்ம தான் சிங்கம் கணக்கா அதையெல்லாம் தூக்கி அப்பால போட்டுட்டு கிளம்பிடோம்ல.

அங்க தாங்க நம்மளுக்கு சனி ஆரம்பிச்சிருக்கு.
அது தெரியாம நம்ம வண்டிய விரட்டிட்டு போயி (இதுல 10 நிமிசம் லேட் வேற), அவசர அவசரமா டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அங்க Introduction song முடிஞ்சிருச்சு. அதுக்காக friend ஒருத்தன திட்டி... ஒரு வழியா seat-அ தேடி உக்காந்தா (நம்ம சனி பகவானும் நம்ம மேல சம்மணம் போட்டு உக்காந்திட்டாரு போல) அங்க ஆரம்பிச்சதுதாங்க, ஒவ்வொரு scene-லயும் குமுறி குமுறி அழ ஆரம்பிச்சா படம் முடியர வரைக்கும் அந்த குமுறல் அடங்கவேயில்லைங்க. அவரு நடிக்கிறாரு, நடிக்கிறாரு, நடிச்சுகிட்டே இருக்காரு. நம்ம படத்தையும் நாலு பேரு பார்ப்பாங்கன்னு ஒரு தடவ கூடவா அவருக்கு தோணல???!!!!

படத்த பத்தி சொல்லணும்னா ..... படத்துல அவருக்கு ரெண்டு கெட்-அப். அதாவது ஒரு நல்ல அப்பு, ஒரு கெட்ட அப்பு. ரெண்டு அப்புக்கும் அவரு வித்தியாசம் காட்டுவாரு பாருங்க. உங்களால கண்டே புடிக்க முடியாது. யாரு கெட்ட அப்பு யாரு நல்ல அப்புன்னு கண்டு பிடிக்கிறவங்களுக்கு அவார்டே குடுக்கலாம்.

என்ன தான் இருந்தாலும் படத்த விமர்சனம் பண்ற அளவுக்கு நாம இன்னும் "ஆவி" நிருபர் ஆகலைங்க...ஆனாலும் 70 ரூபாய் குடுத்து அந்த கொடுமைய பார்த்த ஒரே மன தைரியத்தை மட்டும் வெச்சுகிட்டு நாலே நாலு வார்த்தை sorry நாலு வாக்கியமாவே பேசிக்கறேங்க (ஏன்னா அந்த அளவுக்கு மனசு காயப்பட்டிருக்கு) முதல்ல இது ஒரு அழகான படம் இல்லீங்க॥(அதுக்கு அப்படியே opposite)। அப்புறம் இது ஒரு படமே இல்லீங்க. இதுக்கு மேலயும் இந்த கொடுமைய பாக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு என்னோட "மரியாதைய" தெரிவிச்சுக்கறேங்க....கோவிந்தா!! கோவிந்தா!!!

பின் குறிப்பு:
எங்க project release காரணமா என்னோட முதல் பட விமர்சன release கொஞ்சம் லேட் ஆகிடுச்சுங்க. அதுக்கு முன்னாடி நான் பில்லா 2007 வேற பார்த்துட்டேன். அதனால பில்லா விமர்சனம் கூடிய விரைவில் வரும்னு எதிர்பார்க்கலாம்.


என்னோட விமர்சனத்தைப் பற்றிய உங்களோட விமர்சனத்தையும் , (What a rhyming sentence!?) கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.

National Geographic Photo of the Day